முதலில் அவர் களம் இறங்கட்டும்... கொஞ்சம் ஒப்பாரியை நிறுத்துங்களேன்!


னநாயகம் என்பது நம்முடைய எண்ணங்களுக்கு ஏனையோர் இடம் அளிப்பது மட்டும் அல்ல; ஏனையோரின் எண்ணங்களுக்கு நாம் இடம் அளிப்பதும்தான். தேர்தலுக்கு முன் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விருப்பங்களை முன்வைக்கலாம். தேர்தல் நாள் என்பது அவற்றின் மீதான தீர்ப்பு நாள். ஓட்டுகள் வெறுமனே மக்களுடைய விருப்பங்கள் மட்டும் அல்ல; இந்த நாட்டின் மீது, இந்த ஜனநாயகத்தின் மீது, இந்த அரசியல் மீது, கடந்த கால அரசாங்கத்தின் மீது, எதிர்கால அரசாங்கத்தின் மீது, நம்முடைய வாதப்பிரதிவாதங்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுகள்.

தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியைப் பற்றி, அவர் முன்னிறுத்திய குஜராத் முன்மாதிரியைப் பற்றி, அவருடைய கடந்த கால வன்முறை வரலாற்றைப் பற்றி, அவரை முன்னிறுத்திய பெருநிறுவனங்களைப் பற்றி எல்லோருமே பேசினோம், எழுதினோம், விவாதித்தோம். மக்கள் இப்போது தீர்ப்பு அளித்திருக்கிறார்கள் (நாம் பேசி, எழுதி, விவாதித்தவற்றின் மீதும்தான்). வடக்கே ஜம்முவிலிருந்து தெற்கே குமரி வரை கிழக்கே அருணாசலப்பிரதேசத்திலிருந்து மேற்கே கட்ச் வரை இது தெளிவான தீர்ப்பு. காங்கிரஸ் வரக் கூடாது என்று மட்டும் மக்கள் நினைக்கவில்லை; பா.ஜ.க-தான் வர வேண்டும் என்றும் நினைத்திருக்கிறார்கள். மோடிதான் வர வேண்டும் என்றும் நினைத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு கட்சியின், வேட்பாளரின் வெற்றி, தோல்விக்குப் பின்னணியிலும் மக்களின் வலுவான செய்திகள் அடங்கியிருக்கின்றன. நமக்கு உண்மையாகவே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றால், மக்களின் அந்தச் செய்திகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் நேர்மையான, ஆக்கபூர்வமான வழிமுறையாக இருக்க முடியும். ஆனால், எங்காவது சுய விமர்சனக் குரல்கள் கேட்கின்றனவா என்று சுற்றிலும் நிரம்பி வழியும் குரல்களைக் கேளுங்கள்...  ஒரே புலம்பலும் வசவுகளும் ஒப்பாரியும் ஊளைச்சத்தமும்தான் சூழ்ந்திருக்கின்றன.

51=100, 49=0: இது சரியா?


ந்தக் கணக்கைப் பாருங்கள்: அகில இந்திய அளவில் இந்தத் தேர்தலில் பா.ஜ.க. வாங்கியிருக்கும் ஓட்டு விகிதம் 31%; அது பெற்றிருக்கும் இடங்கள் 282. காங்கிரஸ் வாங்கியிருக்கும் ஓட்டு விகிதம் 19.3%; ஆனால், அது பெற்றிருக்கும் இடங்கள் 44. தேசிய அளவில் அ.தி.மு.க. வாங்கியிருக்கும் அதே 3.3% ஓட்டு விகிதத்தைத்தான் மார்க்ஸிஸ்ட் கட்சியும் வாங்கியிருக்கிறது; ஆனால், அ.தி.மு.க. பெற்றிருக்கும் இடங்கள் 37; மார்க்ஸிஸ்ட்டுகள் பெற்றிருக்கும் இடங்கள் 9. இதைவிடவும் விசித்திரம் பகுஜன் சமாஜ் கட்சி வாங்கியிருக்கும் ஓட்டு விகிதம் 4.1%. ஆனால், ஒரு இடத்தைக்கூட அந்தக் கட்சி பெறவில்லை.
தமிழக அளவில் இந்தக் கணக்கை இப்படிப் போடலாம்: அ.தி.மு.க. வாங்கியிருக்கும் ஓட்டுகள் 43.3%; பெற்றிருக்கும் இடங்கள் 37; தி.மு.க. வாங்கியிருக்கும் ஓட்டு விகிதம் 23.6%; ஒரு இடத்தைக்கூடப் பெறவில்லை.
ஏன்?
ஏனென்றால், இப்போதுள்ள நம்முடைய தேர்தல் அமைப் பின்படி, 100 பேர் உள்ள ஓர் ஊரில், 51 ஓட்டுகளை வாங்குபவர் முழு வெற்றி பெற்றவர்; 49 ஓட்டுகளை வாங்குபவர் முழு தோல்வி அடைந்தவர். அதாவது, 51=100. 49=0.
இது வெறுமனே கட்சிகளுக்கான இழப்பு மட்டும் அல்ல; இந்தக் கட்சிகளுக்காக வாக்களித்த கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கான இழப்பு. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், வீணான ஓட்டுகள்.

தேக்லோ பாய் இட்ஸ் அவர் இந்தியா!


ன்றோடு முடிகிறது இந்தியாவின் வண்ணங்கள் தொடர். ஒருவிதத்தில் ஆச்சரியமாக இருக்கிறது 33 அத்தியாயங்களை இந்தத் தொடர் தொட்டது. பெரிய முன்யோசனைகளோ, முன்தயாரிப்புகளோ ஏதும் இல்லை. இந்தியாவின் நான்கு மூலைகளையும் தொடும், ஒரு குறுக்கு நெடுக்குச் சுற்றுப்பயணம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நிகழ்வான இந்தியத் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில், அரசியல்ரீதியாக இந்தியாவைப் புரிந்துகொள்ள முனையும் ஒரு பயணம். இந்திய வரைபடத்தை மேஜையில் வைத்துக்கொண்டு, யோசிக்கும்போது இவ்வளவுதான் திட்டமாக இருந்தது. பயணத்தைத் தொடங்கிய பின்தான் தெரிந்தது... எவ்வளவு பெரிய நாடு இது... எவ்வளவு பெரிய மக்கள் திரள்... எத்தனை எத்தனை வகையான மனிதர்கள்... எத்தனை எத்தனை கலாச்சாரங்கள்... இப்படி ஒரு பயணத்தை மேற்கொள் பவரை நோக்கி சகஜமாக எல்லோரும் எழுப்பப்படும் இரு கேள்விகளுக்கு இந்த இறுதி அத்தியாயத்தில் பதிலளிப்பதோடு தொடரை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

இந்திய மனசாட்சிக்கு ஒரு கேள்வி


ரு குரலை இந்தியாவின் ஜனநாயகம் தவிர்க்கவே முடியாது. அந்தக் குரலின்றி இந்தியாவின் வண்ணங்கள் தொடரும் முழுமை பெறாது... ஐரோம் ஷர்மிளா. நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராளி அவர்; நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராட்டம் அவருடையது.

யாருமே பிராமணராகவோ தலித்தாகவோ பிறப்பதில்லை: டி.எம்.கிருஷ்ணா



ந்தியக் கலைஞர்களின் குரல்களில் மிக அபூர்வமானது டி.எம்.கிருஷ்ணாவினுடையது. கர்நாடக சங்கீத மேடைகளில், லவங்கி ராகத்தில் 'ஓம்கார காரிணி...' பாடலைப் பாடும்போது அவரிடத்தில் வெளிப்படும் குரலைவிடவும் முக்கியமானது இந்தியாவின் மிகப் பெரிய சாபக்கேடான இனப் பாகுபாட்டுக்கு எதிராக, சாதியத்துக்கு எதிராக அவர் வெளிப்படுத்தும் குரல். கச்சேரிகளில் கட்டமைப்புகளை மீறுவதற்குப் பேர் போன கிருஷ்ணா, இப்போது தன்னுடைய மீறல்களை வெவ்வேறு தளங்களுக்குக் கொண்டுசெல்கிறார். இந்திய சாதியக் கட்டுமானத்தின் கலாச்சாரப் பீடங்களில் ஒன்றாக மாறிவிட்ட கர்நாடக சங்கீதத் துறைக்கு உள்ளேயே இருந்துகொண்டு அவர் வெளிப்படுத்தும் கலகக் குரல் சபாக்களைத் தாண்டி வீதிகளில் படர்ந்து மனசாட்சியுள்ள ஒவ்வொருவரையும் தீண்டுகிறது. வெளியே சமத்துவ வேஷத்துடன் திரியும் இனவாதிகளின் உளவியலை அம்பலப்படுத்துகிறது. நம் மனசாட்சியுடன் உரையாடுகிறது.

உங்களுடைய கடந்த காலத்தைப் பார்க்கும்போது நீங்கள் எழுப்பும் குரல் ஆச்சரியம் அளிக்கிறது. ஒரு பிராமண ராக, வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள். கல்வி ஒரு சுமையாக இல்லாத ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பள்ளிக் கூடத்தில் படித்திருக்கிறீர்கள். இளவயதிலேயே ஒரு நல்ல பாடகராக அடையாளங்காணப்பட்டு, அங்கீகரிக்கப் பட்டிருக்கிறீர்கள். சகலமும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், உங்களுக்கு இந்தச் சாதிய அமைப்பு உதவவே செய்திருக்கிறது. பின் எது உங்களைச் சாதிய அமைப்புக்கு எதிராகப் பேசவைக்கிறது?
ஒரு பிராமணராகவோ தலித்தாகவோ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ யாருமே பிறப்பதில்லை. ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோதான் பிறக்கிறது. பிறகு, அந்தக் குழந்தையைச் சுற்றியுள்ள சூழல் அதன் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது. வழக்கமான பொருளில் சொல்வதென்றால், நான் ஒரு பிராமணக் குடும்பத்தில்தான் பிறந்தேன் (அம்மா அய்யர், அப்பா ஐயங்கார்). ஆனால், ஆனால், பாரம்பரியம், நம்பிக்கைகள், மாச்சர்யங்கள் ஆகியவற்றின் குறுகலான பார்வை இல்லாத குடும்பத்தில் பிறந்ததற்கு நான் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி. மற்ற கலாச்சாரங்கள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், அதுமட்டுமல்லாமல் அக்னாஸ்டிஸிஸம் (கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி தெரியாத நிலை) போன்றவற்றுக்கு எங்கள் வீட்டின் கதவுகள் திறந்தேவைக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது சில வருடாந்திர சடங்குகள் எங்கள் வீட்டில் அனுசரிக்கப்பட்டுவந்தாலும் அர்த்தமில்லாத சடங்குகளுக்கு எங்கள் வீட்டில் பெரும்பாலும் இடமே இருந்ததில்லை. நானும் என் சகோதரரும் பூணூல் அணிந்துகொள்ள வேண்டுமென்றோ சடங்குகளை அனுசரிக்க வேண்டுமென்றோ பூஜைபுனஸ்காரங்களில் ஈடுபட வேண்டுமென்றோ எந்தவித நிர்ப்பந்தங்களும் இருந்ததில்லை. எல்லாக் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பத்துக்கும் பலவீனங்கள் இருந்தன. பாரம்பரியம், நம்பிக்கைகள், மாச்சர்யங்கள் ஆகியவற்றின் குறுகலான பார்வை இல்லாத குடும்பத்தில் பிறந்ததற்கு நான் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி. எல்லாக் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பத்துக்கும் பலவீனங்கள் இருந்தன. ஆனால், அதற்காக மதரீதியிலான சகிப்பின்மையோ மூடநம்பிக்கைகளிலும் ஆச்சார அனுஷ்டானங்களிலும் ஊறிப்போனதும் அறிவுபூர்வமாகவோ ஆத்மார்த்தமாகவோ இல்லாததுமான வைதீகத்தின் தாக்கமோ நல்லவேளை எங்கள் குடும்பத்தில் இருந்ததில்லை. நான் கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படிப்பதற்கு ஏற்ற வீட்டுச் சூழலிலிருந்து வந்தேன் என்று சொல்லக் கூடாது. அந்தப் பள்ளியில் சாதி, மதம் போன்றவற்றுக்குக் கொஞ்சமும் இடம் இல்லை;  பூரண விடுதலையைப் பற்றிய ஒருவருடைய சுயபிரக்ஞையின் மூலமாக உண்மையை - அதாவது பாதையற்ற அந்த நிலத்தை யார் கண்டறிகிறார்களோ அவர்களுடன் (நம் மனதால்) கைகோத்துச் செல்ல அங்குதான் முடியும். எனவேதான், என் பெற்றோர் அங்கே என்னைச் சேர்த்தனர்.

ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோதான் பிறக்கிறது. பிறகு, அந்தக் குழந்தையைச் சுற்றியுள்ள சூழல் அதன் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது என்று சொன்னேன் அல்லவா? உண்மைதான், ஆனால், “நீயே சுயமாகச் சிந்தித்துப்பார், உனது அறிவைப் பயன்படுத்து, உன் உள்ளுணர்வையும் கற்பனையையும் பயன்படுத்து, வெறும் மையுறிஞ்சு தாளாக இருக்காதே, எவ்வளவு அழகான மையாகவும் வடிவமைப்பாகவும் இருந்தாலும்கூட” என்று நம் அனைவருக்குள்ளும் இருந்துகொண்டு ஏதோ ஒன்று ஏதோ ஒரு புள்ளியில் சொல்கிறது. வழிவழியாக வந்த சங்கீதம், கச்சேரியில் முழு வீச்சில் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கும்போது இசைக் கலைஞரும் மேற்கண்ட புள்ளியைச் சந்திப்பார். அப்போது, ஓர் உள்ளொளி அவரைத் தொட்டுச் சொல்லும்: “இதோ பார், இப்போது நீ முழுக்க விடுதலை அடைந்தவன்… பறக்கத் தொடங்கு…”

சாதிய அதிகாரப் படிநிலையின் உயர்பீடங்களில் ஒன்றின் மீது நின்றுகொண்டு, நீங்கள் தொடர்ந்து இந்திய சாதிய அமைப்புக்கு எதிராகப் பேசுகிறீர்கள். எந்த வகையில் சாதியப் படிநிலைகளைத் தூக்கிப் பிடிப்பதில் பிராமணியம் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதுகிறீர்கள்?
நீங்கள் சரியான சொற்களில் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். ஆனால், நான் முன்வைக்கும் விமர்சனங்களை யும் கருத்துகளையும் கேட்கும் சிலர் பிராமணர்கள் என்று தங்களைச் சொல்லக் கூடிய குழுவுக்கு அல்லது சமூகத்துக்கு அல்லது சாதிக்கு எதிரானவன் நான் என்று எடுத்துக்கொள்கிறார்கள். நான் எந்தக் குறிப்பிட்ட சாதிக்கும் ஆதரவானவனோ எதிரானவனோ கிடையாது. நான் சாதி மாச்சர்யங்களுக்கு எதிரானவன், காலங்காலமாக சாதி என்ற அமைப்பு இழைத்துவந்த கொடுமைகளுக்கும், மறை முகமாக அது இன்னமும் இழைத்துக்கொண்டிருக்கும் கொடுமைகளுக்கும் எதிரானவன். மேன்மையான இனம் என்ற கோட்பாட்டுக்கு எப்படி நான் எதிரானவனோ அதேபோல், உயர்ந்த சாதி, ஆசீர்வதிக்கப்பட்ட சாதி என்ற உணர்வுகளுக்கெல்லாமும் எதிரானவன். ஆரியர் என்பவர் யார் என்பதற்கு புத்தர் மிக அற்புதமாக மறுவரையறை செய்திருப்பார் - உன்னத குணங்களைக் கொண்டவர் என்று. வெறும் உடல்ரீதியாக அதாவது கண்கள், தோல், முடி போன்ற வற்றின் நிறத்தால் அவர் வரையறை செய்யவில்லை. அதேபோல் சாஸ்திரிய சங்கீதமும் - அதை நான் கலை இசை என்றே குறிப்பிட விரும்புகிறேன் - ஒரு கலைஞரின் கற்பனை யைச் சார்ந்தத்தேயொழிய அவருடைய சாதியைச் சார்ந்தது இல்லை. கோயிலும் சம்ஸ்கிருதப் பின்னணியுள்ள குடும்பங்களும் அவர்களுடைய உறவினர்களும் என்று வரலாற்றுப் பின்புலமுள்ள கர்நாடக சங்கீதம் அவர்களுடைய சொத்தாக ஆகிவிட்டது. ஒன்றின் சொத்தாக இருப்பதென்பதும் ஒன்றால் சிறைப்படுத்தப்பட்டிருப்பதென்பதும் வேறுவேறு. போற்றிப் பாதுகாக்கப்பட்டு பரந்த அளவில் பங்கிட்டுக்கொள்ள வேண்டிய திறமை என்பதைத் தாண்டி என்னுடைய கலை வடிவம் ஒருவகையில் ஒரு குழுவின் சொத்துரிமையாக, சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுக் கொடுக்கக்கூடியதாக, கிட்டத்தட்ட காப்புரிமைக்கு உட்பட்டதுபோல், ஆகிவிட்டது. இந்தக் கலையின் வாரிசுகளாக இருக்கும் அதிர்ஷ்டசாலிகள் இந்தக் கலையைத் தங்களுடைய தனியுடைமையாகக் கருதாமல் பொது வுடமையாகக் கருதி பகிர்ந்துகொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். என்னுடைய கலை வடிவம் என்பது என்னுடைய உயிர்மூச்சு, அது ஒரு அனுபவம். அது மந்திர உச்சாடனம்போல் இறுகிப்போய்விடக் கூடாது.

வேதங்களில் தொடங்கி ஜே.கிருஷ்ணமூர்த்தி வரை இந்தியாவுக்கு என்று ஒரு நீண்ட தத்துவ மரபு இருக்கிறது. மனித வாழ்க்கையை இன்னொரு நிலைக்குக் கொண்டுசெல்லும் அவற்றை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், இப்படிப்பட்ட ஒரு நாட்டில்தான் மனித உரிமைகளை மிதித்து நசுக்கும் மோசமான சாதிய படிநிலையையும் இறுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறோம். இதை எப்படிப் பார்ப்பது?
மிக நேர்மையான கேள்வி இது. மிகவும் அவசியமானதும்கூட. நாம் நமது தேசம்குறித்துப் பெருமைப்பட வேண்டும். ஆனால், இந்தியாவின் நிறைகுறைகளைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் அதன் கண்மூடித்தனமான வழிபாடிகளாக நாம் ஆகிவிடக் கூடாது. இதை நான் விளக்க முயல்கிறேன்.


விவசாயிகள் இனியும் காத்திருக்க முடியாது: ஆறுபாதி கல்யாணம்


கிக்கும் வெயிலில் வயலில் நிற்கிறார் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான ஆறுபாதி கல்யாணம். எப்போதும் விவசாயிகள் பிரச்சினையில் களத்தில் முன்வரிசையில் நிற்கும் போராளி. ஒட்டுமொத்த தேசத்தின் விவசாயிகளுக்காகவும் சிந்திப்பவர்; பேசுபவர். இந்திய விவசாயிகளின் பின்னணியில் நம்முடைய அரசியலைப் பேசலானார்.

குறைந்தது நாட்டின் சரிபாதியினர் விவசாயம் சார்ந்திருப் பவர்கள். ஆனால், ஏன் விவசாய சமூகத்தால் அரசியலில் ஒரு சக்தியாக உருவாக முடியவில்லை?
அரசியல்வாதிகளின் பிரித்தாளும் திட்டம்தான் காரணம். முடிந்தால் கட்சியைச் சொல்லிப் பிரிப்பார்கள். இல்லா விட்டால், இருக்கவே இருக்கிறது சாதி, மதம், இனம்.

எந்தத் தொழில்காரர்களைவிடவும் விவசாயிகளிடத்தில்தான் இனப்பாகுபாடுகள் அதிகம் இருக்கின்றன. என்ன காரணம்? விடுபட வழியே இல்லையா?
விவசாயிகள் எளிய மனிதர்கள் என்பதும் அதனாலேயே அவர்கள் எளிய இலக்குகளாக மாறிவிடுகிறார்கள் என்பதும் தான் காரணம். ஒவ்வொரு விவசாயியின் கையிலும் நிலம் இருக்கும் நாளில் இனப் பாகுபாடுகள் தானே காணாமல் போகும்.

நாடு முதன்முதலில் வளர்ச்சியை முன்னிறுத்தி ஒரு தேர் தலைச் சந்தித்திருக்கும் நிலையில், விவசாயிகள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அதாவது, 1951-ல் இந்தியாவின் மக்கள்தொகை 33 கோடி. அன்றைய உணவு உற்பத்தி 500 லட்சம் டன். இன்றைக்கு மக்கள்தொகை 120 கோடி. உணவு உற்பத்தி 2,630 லட்சம் டன். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உணவு உற்பத்தியை அதிகரித்துக்கொடுத்திருக்கிறான் இந்நாட்டு விவசாயி. ஆனால், இன்றைக்கு விவசாயத்தின் நிலையும் விவசாயிகளின் நிலையும் இந்நாட்டில் என்ன? ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான். அப்படியென்றால், இது ஒரு தேசிய அவமானம் இல்லையா? ஒவ்வொரு இந்தியரும் வெட்கப்பட வேண்டிய சமாச்சாரம் இல்லையா? உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றுகிறீர்களே, விவசாயியையும் விவசாயத்தையும் பாதுகாக்க சட்டம் வேண்டாமா?

நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி: எம்.எஸ். சுவாமிநாதன்


சுதந்திர இந்தியாவின் விஞ்ஞானிகளில் எம்.எஸ். சுவாமிநாதன் அளவுக்குக் கொண்டாடப்பட்டவரும் இல்லை; தூற்றப்பட்டவரும் இல்லை. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா பரிசீலனைப் பட்டியலிலும் நோபல் பரிசுப் பரிசீலனைப் பட்டியலிலும் தொடர்ந்து அவர் பெயர் இடம்பெறுகிறது. ‘டைம்' இதழ் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற 20 பேரில் ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்தது. ஒருபுறம் பசுமைப் புரட்சியின் தந்தை என்று புகழப்படும் அவர், இன்னொரு பக்கம் இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைச் சீரழித்தவர் என்ற சாபத்தையும் எதிர்கொள்கிறார். ஆட்சியாளர்கள் பலருடன் நெருக்கமாகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. இந்திய விவசாயம் - இந்திய விஞ்ஞானம் இரு துறைகளைப் பற்றியும் அவரிடம் பேசினேன்.

இன்றைக்கு உங்களைப் பற்றி இரண்டு கதைகள் சொல்லப்படு கின்றன. நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள்? இந்திய வேளாண்மையில் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தவராகவா? இந்தியப் பாரம்பரிய விவசாயத்தைச் சீரழித்தவராகவா?
நீங்கள் என்னுடைய பின்னணியைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய அப்பா சாம்பசிவம் பெரிய மருத்துவர். கும்பகோணத்தில் சொந்தமாக மருத்துவமனை வைத்திருந்தவர். அந்த மருத்துவமனையை அவருக்குப் பின் பார்த்துக்கொள்ள வேண்டும்; அதற்கேற்ப நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்றே என்னுடைய குடும்பத்தார் ஆசைப் பட்டார்கள். 1954-ல் நான் டெல்லியில் இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தபோது, எனக்கு முன் இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட வாய்ப்புகள் எல்லா வற்றையும் உதறிவிட்டுதான் உள்ளே நுழைந்தேன். அன்றைக் கெல்லாம் பலராலும் அவநம்பிக்கையோடு பார்க்கப்பட்டது விவசாய ஆராய்ச்சித் துறை. இருந்தும் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால், தேச பக்தி என்றால், அதை ஏதோ ஒரு விதத்தில் காரியமாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்த தலைமுறை என்னுடையது. வறட்சியையும் பஞ்சத்தையும் நேரடியாகப் பார்த்துத் துடித்த தலைமுறை என்னுடையது. இந்தியாவின் பிரதமர்கள் அன்றைக்கெல்லாம் நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய எவ்வளவு துடித்தார்கள் என்பதை நேருவின் எழுத்துகளைப் படித்தால் புரிந்துகொள்ள முடியும். சாஸ்திரி வாரத்தில் ஒருநாள் விரதம் இருக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்ட காலம் அது. இன்றைக்கு அபரிமித உணவு உற்பத்திக் காலத்தில் இதையெல்லாம் அறியாதவர்கள் யாரைப் பற்றியும் எதையும் பேசலாம்.

அவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள்

காந்திஜி அறையில் சமஸ்

ப்போதுமே வீடுகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. ஒரு மனிதனைப் பற்றி அவன் வெளியே கட்டமைக்கும் பிம்பங் களுக்கும் அவனுடைய தனிப்பட்ட வாழ்வுக்கும் எந்த அளவுக்கு நெருக்கம் இருக்கிறது என்பதை வெளிப்டையாக நமக்குக் காட்டுபவை அவை. இந்தப் பயணத்தில் அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளைப் பார்ப்பதையும் ஒரு பகுதியாக வைத்திருந்தேன்.
இன்றைய அரசியல்வாதிகளை வீடுகளின் வழியே பார்க்க வேண்டும் என்றால், அவர்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் படாடோபமான போயஸ் கார்டன் வீட்டையும் பரந்து விரிந்த கொடநாடு எஸ்டேட்டையும் நமக்குத் தெரியும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதியின் பாதல்பூர் வீடு அதையும் தூக்கிச் சாப்பிடக் கூடிய மாளிகை. லக்னோ விக்ரமாதித்யா மார்கில் உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் வீடும் மாளிகைதான். மும்பையை மிரட்டும் மஹாராஷ்டிர நவநிர்மாண் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவின் சிவாஜி பார்க் வீடு கனத்த இரும்புக் கதவுகள் அடங்கிய கான்கிரீட் சுவர்களோடு அவருடைய அச்சத்தை வெளிக்காட்டுகிறது. மும்பை, பாந்த்ரா கலா நகரில் உள்ள சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் வீடும் ஏகப்பட்ட பாதுகாப்புக்கு இடையே அதே கதியில்தான் இருக்கிறது. டெல்லி அரசியல்வாதிகள் அரசு கொடுத்திருக்கும் மாளிகைகளில் அல்லது அவர்களே உருவாக்கிக்கொண்ட மாளிகைகளில் குடியிருக்கிறார்கள்.

ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் வீடுகளில் ஒரே விதிவிலக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியினுடையது. கொல்கத்தா ஹரீஷ் சாட்டர்ஜி தெருவே மிகச் சாதாரணமான ஒரு தெருதான். அங்கே உள்ள சுமாரான வீடுகளில் ஒன்றில் தன் சகோதரர்களோடு இருக்கிறார் மம்தா. வீட்டுக்கு வெளியே நான்கு போலீஸ்காரர்கள். அவ்வளவுதான் பந்தோபஸ்து. “தீதி பிரச்சாரத்துக்காக வெளியூர் போயிருக்கிறார். இரண்டு நாட்கள் தங்கினீர்கள் என்றால், ஊர் திரும்பிவிடுவார்; சந்திக்கலாம்” என்றார்கள். இதைத் தாண்டி பகிர்ந்துகொள்ள இன்றைய தலைவர்களின் வீடுகளில் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. அதேசமயம், நம்முடைய முன்னோடிகளின் வீடுகளில் ஐந்து பேரின் வீடுகளைப் பற்றிக் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஏராளமானோர் வீடுகளைப் பார்த்தேன் என்றாலும் இங்கே ஒரு தலைவர், ஒரு போராளி, ஒரு படைப்பாளி, ஒரு ஆன்மிக குரு, ஒரு வழிகாட்டி ஆகியோரின் வீடுகளை மட்டும் தருகிறேன்.

தமிழர்கள் எந்த அளவுக்கு யோக்கியஸ்தர்கள்?


டெல்லியில் இருந்தபோது நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைச் சுற்றிப்பார்க்க ஒரு நாளை ஒதுக்கினேன். அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்று நானூறு ரூபாய் செலவில் ஏசி பஸ்ஸில் டெல்லியைச் சுற்றிக்காட்டுகிறது. நாம் தனியாக டாக்ஸி அமர்த்திக்கொண்டு சுற்றுவதைவிடவும் இது சிக்கனமான ஏற்பாடு என்று நண்பர்கள் சொன்னதால், இதைத் தேர்ந்தெடுத்தேன். குதுப் மினார், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி செங்கோட்டை வரை சுற்றிக்காட்டுவது பயணத் திட்டம். பஸ்ஸில் மைக்கோடு ஒரு சுற்றுலா வழிகாட்டியை அந்தத் தனியார் நிறுவனம் அமர்த்தியிருந்தது. பஸ் முக்கியமான இடங்களைக் கடக்கும்போது அந்தந்த இடங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தார் வழிகாட்டி. ஜன்பத் சாலையில் பஸ் நுழைந்தபோது மன்மோகன் சிங் இல்லம், சோனியா காந்தி இல்லம் என்று காட்ட தொடங்கியவர் தொடர்ந்து இந்நாள் -முன்னாள் அமைச்சர்கள் இல்லங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்கள் என்று வரிசையாக அறிமுகப்படுத்திக்கொண்டேவந்தார். திடீரென்று ஒரு வீட்டைக் காட்டி பீடிகை போட ஆரம்பித்தார்.

"இந்த வீடு உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒருவரின் வீடு. யாருடையது சொல்லுங்கள் பார்ப்போம்... ஒரு நிமிஷத்துக்குள் சொன்னால் பரிசு தருவேன்..."

பயணிகள் விழிக்கின்றனர். ஓர் இடைவெளி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நூல்விட ஆரம்பித்தார்.

"இவரும் ஒருவகையில் சக்ரவர்த்திதான்... எங்கே கண்டுபிடியுங்கள்..."

"சரி, இவர் தென்னாட்டைச் சேர்ந்தவர்..."

"இவர் ஒரு மதராஸி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்..."

இப்போது பயணிகளிடமிருந்து இரு குரல்கள்.

"ஹே... இது கஷ்டம்..." "ஆமாம்... நிறையப் பேர் ஞாபகத்துக்கு வருகிறார்கள்..."

உடனே வழிகாட்டி கடைசித் துருப்பைப் போடுகிறார்...

"சரி... கடைசியாக ஒரு குறிப்பு தருகிறேன். முயற்சித்துப் பாருங்கள். ஒரே டீல்... ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி..."

இப்போது மொத்த பஸ்ஸும் ஒரே கூச்சலாலும் கைத்தட்டல்களாலும் அதிர்கிறது...

"ராசா... ராசா வீடு..."

சவாரியின் வண்ணங்கள்


ரு பயணத் தொடரில் வாகனங்களுக்கு என்று ஒரு அத்தியாயம்கூட இல்லை என்றால் எப்படி? இந்த அத்தியாயத்தை நாம் வாகனங்களுக்கு அர்ப்பணிக்கலாம். கூடவே, நாட்டின் பல்வேறு பகுதிகள் பொதுப் போக்குவரத்தை எப்படியெல்லாம் வெற்றிகரமாகக் கையாள்கின்றன என்பதையும் பார்க்கலாம்.

திருவனந்தபுரம் ஆட்டோக்கள்



நாட்டிலேயே திருவனந்தபுர ஆட்டோக்காரர்கள் அளவுக்கு நியாயவான்களை எங்கும் சந்திக்க முடியவில்லை. குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 14. ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் சென்றுவிட்டு 15 ரூபாய் கொடுத்தீர்களேயானால், ஒரு ரூபாய் மீதம் தருகிறார்கள்!

இந்தக் கரசேவை இந்தியாவுக்குத் தேவை!


ந்தியாவின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இந்தியாவிடமே இருக்கின்றன. இதை இந்தப் பயணத்தின்போது மேலும் ஆழமாக உணர்ந்தேன். நாட்டின் தலையாய பிரச்சினை தண்ணீர்தான். காஷ்மீரில் தொடங்கி தமிழகம் வரை நாடு முழுவதுமே தண்ணீர் பிரச்சினை பெரிய சவாலாக உருவெடுத்துவருகிறது. நீர்நிலைகள் படுகொலை நம் கண் முன்னே நடக்கிறது. ஆனால், அவற்றை எப்படிப் பாதுகாப்பது அல்லது மீட்டெடுப்பது? சில நம்பிக்கையூட்டும் முன்மாதிரிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முதல் பூட்ஸ் ஆயுதப் படைகள், இரண்டாவது பூட்ஸ் வளர்ச்சி: விஜயகுமார் ஐ.பி.எஸ்.


ந்தியாவின் முடிவுகளைத் தீர்மானிக்கும் தலைகள் கூடும் ஜமா இந்திய சர்வதேச மையம். 1960-ல் இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த ஜப்பான் மன்னர் அகிடோ கையால் இதை நிறுவினார் பிரதமர் நேரு. டெல்லியின் கௌரவம் மிக்க கலாச்சார அடையாளங்களில் ஒன்றான இந்த மையம் அறிவுஜீவி அரசியல்வாதிகள், பெரும் அதிகாரிகள், படைப்பாளிகள் உள்ளிட்டோரை உறுப்பினர்களாகக் கொண்டது. படிக்க அருமையான நூலகம் இங்கு உண்டு. நாட்டின் மதிப்புமிக்க அதிகாரிகளில் ஒருவரான விஜயகுமாரை இங்குதான் சந்தித்தேன். ஒரு காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங்கிய விஜயகுமார், தேசிய காவல் அகாடமியின் இயக்குநர் பதவி வரை காவல் துறையின் பெரும் பதவிகள் அனைத்தையும் பார்த்தவர். வீரப்பனை வீழ்த்தியது இவர் அடையாளம். இந்திய அரசு, சமகாலத்தில் எதிர்கொள்ளும் பெரும் உள்நாட்டுப் பிரச்சினையான மாவோயிஸ்ட் பிரச்சினையை எதிர்கொள்ள விஜயகுமாரைத்தான் தேர்ந்தெடுத்தது மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) தலைவராக. காஷ்மீர் பிரச்சினையிலும் அரசுக்கு அவர் ஆலோசனை சொன்னார். இப்போது உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருக்கும் விஜயகுமார், வெறும் ஆலோசகராக மட்டும் இல்லை; களத்தில் நிற்கிறார். தேர்தல் புறக்கணிப்பைப் பிரகடனப்படுத்திய மாவோயிஸ்ட்டுகள் பஸ்தாரில் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் மூவர் உயிரிழந்த செய்தி வந்தபோது, இந்த உரையாடல் நடந்துகொண்டிருந்தது. ஒருபுறம் செல்பேசியில் அடுத்தடுத்த கட்டளை களை அனுப்பிக்கொண்டே மறுபுறம் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த அதிகாரவர்க்கத்தின் பங்களிப்பைப் பற்றிப் பேசினார் விஜயகுமார்.

இரு கிராமங்களின் கதை!


ந்தியா என்பது கிராமங்களின் தொகுப்புதான். இந்திய கிராமங்களைப் பற்றி எழுதுவது என்றால், ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் எழுதலாம். அவ்வளவு பொக்கிஷங்களை அவை புதைத்துவைத்திருக்கின்றன. எனினும், குஜராத்தின் மதாபரும் தேசாரும் எதனாலோ திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.

அழிவதற்கு ஒரு நகரம்!


ரு நகரத்தைப் பற்றி இப்படி ஒரு தலைப்புடன் எழுதலாமா என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. பிழைப்பதற்காகச் செத்துக்கொண்டிருப் பவர்கள் வாழும் ஒரு நகரத்தைப் பற்றி எழுதும்போது வேறு எப்படித் தலைப்பிட முடியும்? நீங்கள் அலாங்கைப் பார்க்க நேரில் வர வேண் டாம்; அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் கதைகளைக் கொஞ்ச நேரம் கேளுங்கள். இதைவிட மோசமான ஒரு தலைப்பையே தேடு வீர்கள். அலாங்கின் கதை நாம் அவசியம் பேச வேண்டியது. ஏனென்றால், அதன் அழிவு, வளர்ச்சி என்ற சொல்லிலிருந்தே தொடங்குகிறது.

வாழ்வதற்கு ஒரு நகரம்!


ந்தியா வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கிறது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். மாநகரங்கள்தான் வசதியான வாழ்க்கையைத் தரும் என்று அரசாங்கங்களும் நம்புகின்றன; மக்களும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகளைத் தாண்டி பெருநிறுவனங்களும் முதலாளிகளும் அதையே விரும்புகிறார்கள்; தீர்மானிக்கிறார்கள். எப்படியும் மாநகரங்கள் தலைவிதியாகிவிட்ட சூழலில், ஒரு மாநகரத்தின் ஆன்மா எப்படி இருக்க வேண்டும் என்பதை கொல்கத்தாவில் கண்டேன்.

கொல்கத்தாவைப் பற்றி பணக்கார வங்காளிகளிடம் கேட்கக் கூடாது. முக்கியமாக வங்க முதலாளித்துவ எழுத்தாளர்களிடம் கேட்கவே கூடாது. இப்படித்தான் தோன்றியது கொல்கத்தாவில் இருந்த நாட்களில். ஏனென்றால், வங்காளிகள் இப்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாக வணிகத்திலும் கல்வியிலும் கலைகளிலும் கலாச்சாரத்திலும் திளைத்துக்கொண்டிருந்த அன்றைய கல்கத்தா, இன்னமும் அவர்கள் நினைவிலிருந்து அகலவில்லை. கல்கத்தாவுக்கும் கொல்கத்தாவுக்குமான இடைவெளி அவர்களைக் குழப்புகிறது. மும்பையுடனும் சென்னையுடனும் பெங்களூருவுடனும் ஒப்பிடுகையில் அவர்களுடைய கொல்கத்தா வளர்ச்சியில் பின்தங்கிவிட்டதாக நினைக்கிறார்கள். இந்த மாநகரம் தொழில்முனைவோருக்கான களம் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வங்க எழுத்தாளர்களோ இது அழிந்துகொண்டிருக்கும் மாநகரம் என்று புலம்புகிறார்கள். ஒரு நகரத்துக்குப் புதிதாகச் சென்று சில நாட்கள் தங்குவோருக்கும் அந்த நகரத்திலேயே வாழ்வோருக்கும் கிடைக்கும் பார்வைகள் வெவ்வேறானவை. நிச்சயம் உள்ளூர்க்காரர்களின் புரிதல்கள் வெளியிலிருந்து செல்லும் ஒருவருக்குக் கிடைக்காது. ஆனால், இந்தியா முழுவதும் சுற்றிவிட்டுச் செல்லும்போது ஒப்பீட்டளவில் கொல்கத்தா மட்டுமே இதயத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் மாநகரமாகப் படுகிறது. இந்தியாவில் வாழ்வதற்கு ஒரு மாநகரம் என்றால், அது கொல்கத்தாவாக மட்டுமே இருக்க முடியும் என்று தோன்றுகிறது.